29.1 C
Jaffna
Friday, May 7, 2021
Home ஆய்வுகள்

ஆய்வுகள்

மட்டக்களப்பில் காட்டுக்குள் அமைந்துள்ள பண்டைய வரலாற்று சின்னம் : உரிமை கோரும் பௌத்தர்கள் ; கூட்டமைப்பினர் கள விஜயம் !

மட்டக்களப்பில் செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஈரளக்குளம் ஆழியாஓடை | கவர் மலை கிராமத்தின் எல்லையில் புலுட்டுமானோடை காட்டுக்குள் அமைந்துள்ள 2200 வருடங்கள் பழமையான பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்தினை அண்மையில் அரச அதிகாரிகள்...

திருவெற்றியூர் தொகுதியில் புதிய வரலாற்றுச்சாதனை படைக்கப்போகிறாரா சீமான்??(விரிவாக படிக்க)

தமிழ் நாட்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற்று இன்றைய தினம் அதிகாலை அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.அந்த வகையில் திருவெற்றியூர் சட்ட மன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி...

கனடா தினத்திற்குள் கனேடியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது சாத்தியமா? ஒர் பார்வை,

COVID பெரும் தொற்றின் ஒரு வருட காலத்தில் கனேடிய அரசியல் தலைவர்களிடம் கோரப்பட்ட பிரதான விடயம் ஒன்றுதான்: தொற்றுநோயை நிர்வகித்தல்.ஆனாலும் COVID ஒரு பெரும் தொற்றாக அறிவிக்கப்பட்ட ஒரு வருட காலத்தில் G7...

இரண்டு வருடங்களாகிவிட்டது -அவர்கள் இன்னமும் பதில்களை கோருகின்றனர்

மினோலி டி சொய்சாமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் புதியமுகங்கள் காணப்படும்போது அவர்களை போதகர் வரவேற்பது வழமை.குணப்படுத்தும் தேவாலயம் என்ற அடிப்படையில் அங்கு கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் வரவேற்கப்படுவது வழமை.இரண்டு வருடங்களிற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று...

இயற்பியல் வெளிகளின் விழிநிலையும் அதன் நுகரும் நிலைகளும்

பெரும் திணிசுகளின் பௌதீகத்தை சார்புக் கோட்பாட்டிலும் ((General Relativity) நுண்திணிசுகளின் பௌதீகத்தை மீதிணிசு இயக்கவியலிலும் (Quantum Mechanics) விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டினையும் இணைத்து சர்வதேற்றம் ஒன்றினை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். ...

தியாகத்தாய் அன்னை பூபதியின் நினைவுகள்

ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது.விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம்....

சின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை

நடிகர் விவேக் நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில்...

‘இனியும் தலைகுனிந்து வாழமுடியாது’ – கர்ணனும் மலையகமும்!

ஒடுக்கப்பட்ட – அடக்கப்பட்ட ஓர் சமூகத்துக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அநீதிகளால், கொடுமை தாங்காது, பொங்கியெழுந்து – நீதிக்காகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஓர் கிராமமே ஓரணியில் திரண்டு போராடுகின்றது. இதனால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்....

ஆயரும் அரசியல்வாதிகளும்

2013ஆம் ஆண்டு தமிழ் சிவில்சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது. அப்பொழுது மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த அமரர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் சிவில்...

மாகாணசபைத் தேர்தலை நோக்கித் தமிழ் கட்சிகள்?- ஒன்றுபடா விட்டால் உண்டு விளைவு!!

தேர்தல்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கபட்டிருப்பதனால் தமிழ் கட்சிகள் மத்தியில் அதை நோக்கிய தயாரிப்புகள் தொடங்கிவிட்டன.மகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய தேவை யாருக்கு அதிகமுண்டு? அந்தத் தேர்தல்கள் குறித்து ஜெனிவா தீர்மானத்தில் கூறவேண்டிய தேவை மேற்கு...

புலிவாலை பிடித்த கதையாகிவிட்டதா 1000 ரூபா?

சம்பள நிர்ணய சபையின் ஆயிரம் ரூபா சம்பளம் என்ற முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் கம்பனி தரப்பு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதனால் சம்பள நிர்ணய...

தமிழ் தலைமைகள் பேசத் தயங்கியதை பேசி இனத்தின் தலைவராகியவர் ஆயர்!

உலகில் மதம் கடந்து நேசிக்கப்பட்டவர்கள் சிலர்தான். அன்னை திரேசா என்றதும் எமக்கு அவரின் மனிதாபிமான முகம்தான் நினைவுக்கு வருகிறது. உலகில் பல மதங்கள் காணப்பட்ட போதும் மதத்தின் தத்துவங்களை வாழ்வில் பிரதிபலித்து வாழ்ந்த...

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவாலயத்தின் வரலாற்று தொன்மை

க.கிரிகரன் B.A (Archaeology special)இலங்கையின் வடபாகத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று பழமை வாய்ந்த உருத்திரபுரம் (உருத்திரபுரீஸ்வரர் சிவன் கோயில் ) கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ளது, திராவிட கட்டடக்கலைமரபில் அமையப்பெற்ற இவ்வாலயத்தில்...

சிறிலங்காவுக்கு சவாலாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கமாம்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முனைப்பு, ஜெனீவா விடயத்தில் சிறிலங்காவுக்கு பெரும் சவாலாக உள்ளதென கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஓன்று...

சிறிலங்கா விடயத்தில் ஐ.நா தன் கடந்தகால தவறை சரிசெய்ய ஓர் வாய்ப்பு !

உலகெங்கும் போரினாலும், இனப்படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினை பெற்றுக் கொள்வதில், ஐ.நாவின் தேவை தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதன் மூலம், தனது கடந்த கால தவறுகளை...

மற்றொரு பொறிக்குள் சிக்கும் இலங்கை

-என்.கண்ணன்“சீனா இலங்கையிடம் யுவான்களை கடனாக கொடுத்து, டொலர்களாகத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது சீனா தனது நாணயத்தை டொலர்களாக மாற்றிக் கொள்வதற்கு கையாளுகின்ற ஒரு தந்திரம்”வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாமலும், வெளிநாட்டுக் கடன்களை...

புலிகளையும் – அரசையும் ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா?

தமிழ் மக்களையும் – இலங்கை அரசையும் பொறுத்துவரை அடுத்து வரும் நாட்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. ஜெனிவாவில் நடந்துவரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் – தமக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் – இன்னல்களுக்கு நீதி...

மற்றுமொரு ஜெனிவாக் கூட்டத்தொடர்: எதனை சாதிக்க முடியும்?

-ரொபட் அன்டனி -புதிய பிரேரணை ஒன்று இலங்கை குறித்து கொண்டுவரப்படும் பட்சத்தில் அரசாங்கம் முற்றுமுழுதாக அந்த பிரேரணையை எதிர்க்கும் என்றே தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான நிலையில் குறித்த பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.சீனா இலங்கைக்கு...

குருந்தூர் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது தாராலிங்கம் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் N.K.S. திருச்செல்வம்!!!

முல்லைத்தீவு – தண்ணீரூற்று, குருந்தூர் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் அநுராதபுர காலத்தை ஒத்த சின்னம் என தொல்பொருட்கள் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், அவை வேறு காலத்திற்கு உட்பட்டவை என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.குருந்தூர்...

கொழும்பு ஊடகங்களின் பாரபட்சத்தன்மை குறித்து கவலை வெளியிட்ட அமெரிக்க தூதுவர்!

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் இலங்கையின் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்களின் பாரபட்ச தன்மையை சூட்சமாக கிண்டல் செய்துள்ளார்.எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெறுவது முக்கியமானதும் உரிமையும் கூட அவற்றை...

வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்கள் தங்களின் பின்னால் அணிதிரண்டிருப்பதாக நினைக்கும் (ஆ )சாமிகள்.

பொத்துவிலில் பேரணி ஆரம்பித்த போது பேரணி நடக்குமா என பல அரசியல்வாதிகள் வீடுகளுக்குள் ஒளித்திருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பைச்சேர்ந்த சுமந்திரன், சாணக்கியன், அரியநேத்திரன், சிறிநேசன், யோகேஸ்வரன், சேயோன் , ஜனா கலையரசன்,...

ஆவா குழு ரவுடிகளை ஒவ்வொருவராக கைது செய்த போலீசார்!!எங்கே நடந்தது?

யாழில் நேற்று முன்னாள் ஆவாகுழு ரௌடியின் தலைமையில் நடைபெற்ற சிறு குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இருவரை பொலிசார் கைது செய்ய முயன்றனர். அவர்கள் வாள்வெட்டுக்குழு ரௌடிகள் என தெரிவித்தே பொலிசார் கைது...

தொடர்ச்சியாக அதிகரிக்கும் காச நோயாளர்களின் எண்ணிக்கை!!!

நாட்டில் காச நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.40 வீதமான காச நோயாளர்கள் மேல் மாகாணத்திற்குள் இருப்பதாக காசநோய் மற்றும் சுவாச நோய் தொடர்பான தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.இலங்கையில் வருடாந்தம் 8,000...

பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்!!!

பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்சமைக்கும் போது பச்சை மிளகாயை சேர்ப்பதால், அது உணவிற்கு ஒரு தனிசுவையைத் தருவதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.எனவே இவ்வளவு நன்மைகளைத் தன்னுள் கொண்ட பச்சை...

கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா!!!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...

இனப்படுகொலையா எங்கே? சுரேஸ் சீற்றம்!

காலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்...

கொரோனா தொற்றின் புதிய அறிகுறி

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...

கொரோனா இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க… இல்லன்னா நிலைமை இன்னும் மோசமாயிடும்

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடமாகப் போகிறது. இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாம் கொரோனாவுடன் வாழ பழகிக் கொண்டோம். இருப்பினும், நாளுக்கு நாள் கொரோனாவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....

நாட்டில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி !!!!

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.நோயாளரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளூடாக இந்த விடயம் உறுதி...

ஆர்னோல்ட் மற்றும் மணிவன்னன் இருவரும் மேயராகத் தகுதியற்றவர்கள்!

இது என்ன டிசைன்…? சபாஷ் சரியான போட்டி!ஆர்னோல்ட் மற்றும் மணிவன்னன்இருவரும் மேயராகத் தகுதியற்றவர்கள்!உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்குக்குசட்ட நிபந்தனைக் கடிதம் அனுப்பிவைப்புயாழ் மாநகர சபை மேயர் தேர்வில் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன்...

சுவை, மணம் நுகரும் திறனை முற்றாக அழிக்கிறது கொரோனா -அதிர்ச்சி ஆய்வு தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலரும் அதிலிருந்து குணமடைந்த பின்னரும் மணம், சுவை உணர்வுகள் அற்றிருக்கின்றனர் என்று விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். இந்த உணர்வுகள் மீளத் திரும்புமா? அப்படியானால் எப்போது திரும்பும் என்று மருத்துவர்களால் கூறமுடியாது...

தமிழ்தேசிய தலைவர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தவர்கள் முஷ்லிம் அரசியல் தலைவர்களே.

தமிழ்முஷ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்ற கொள்கையுடன் தமிழ்தேசிய தலைவர்கள் தந்தை செல்வாகாலம் தொடக்கம் ,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், தற்போதைய சம்மந்தன் ஐயா காலம் வரை இருந்தனர் ஆனால் அதை தட்டிக்கழித்தவர்கள்...

அன்புள்ளங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!: நகர்வு

மலர்ந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஏற்படும் புத்தாண்டாகத் திகழவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் நகர்வின் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!நகர்வுஉலகத் தமிழரின் இலக்கு...

எல்லாள மன்னன்..

எல்லாளன் எங்கள் குல மன்னன்சொல்லால் வீரம் புகட்டாதுவில்லால் வீரம் படைத்த மன்னன்தாழ்ந்த தமிழை ஓங்கசெய்தவன்வீழ்ந்த இனத்தை வரலாறாய்பாடச்செய்தவன்பண்பாட்டை பேணிக்காத்தவன்துன்புற்றோரை இன்புறச்செய்தவன்வனப்பாய் இயற்கையைமனப்பாயில் மகிழ்வாய் கிடத்தியவன்எதிர்த்தவன் எவராகினும்அதிர்வாய் புடம் போட்டவன்துஷ்ட படைகளைநஷ்டம் கணாச்செய்தவன்முதிர்ந்த அகவையிலும்உதிராத...

இறைவழிபாடும் – மணி ஓசையும்..!

கோயில்களில் மணிகளை பிணைக்கும் பழக்கம் நம்மிடம் இருந்து வருகிறது.வீட்டிலும் இறை வழிபாட்டின்போது, மணி முக்கிய பங்கு வகிக்கிறது.இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது, மணி அடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.இந்த மணியை அடித்து ஒலிக்கச் செய்யும் சடங்கு...

தமிழீழ மக்களும் 2021 ஜெனிவா படலமும்!

இலங்கைதீவின் வடக்கு கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில், மக்கள் பலவிதப்பட்ட பருவ காலங்களை எதிர் கொள்கின்றனர். வெய்யில், மழை, குளிர் ஆகியவற்றுக்கு அப்பால் கள்ளு, மாம்பழம், பலாப்பழம், பனம்பழம், முருங்கைக்காய் போன்றவை குறிப்பிட்ட காலங்களிலேயே கிடைகிறது. இவ் அடிப்படையில,; ஒழுக்கமான நிதானமான தந்திரம் கொண்ட தலைவர் ஒருவர் இல்லாத இவ் கால கட்டத்தில, விடயம் விளங்கியவர்களும் விடயம் விளங்காதவர்களும் ஜெனிவா பற்றி புலம்புவது வழமையாகியுள்ளது. சகல ஊடகங்களும் - பத்திரிகை, தொலைகாட்சி, வானொலி, இணையதளம் யாவும் இரவுபகலாக ஜெனிவா படலமே வாசிக்கின்றனர். இக்காலகட்டத்தில் மனித உரிமை தெரிந்தவரும், தெரியாதவர்களும், அரசியல் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும், சட்டம் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் வேற்று மொழி விசேடமாக  ஆங்கிலம் தெரியாதவர்களும் எதிர்வரும் ஜெனிவா பற்றி கொக்கரிப்பதற்கான முக்கிய காரணி என்னவெனில், இந்த அருமையான சந்தர்ப்பத்தில் அப்பாவிகளிடமிருந்து நல்ல நிதி சேகரிக்கலாம் என்பதுடன, சிலர் இன அழிப்பு போர்க்குற்றம் புரிந்த பௌத்த சிங்கள அரசை மறைமுகமாக காப்பாற்ற முனைவதை காணக்கூடியாதகவுள்ளது. ஜெனிவா, மனித உரிமை பற்றி கதைப்பதற்கும், கண்டனங்கள் தெரிவிக்கவும் நான் யார் என்பதை இங்கு கூறியே ஆகவேண்டும். இல்லையேல் விசமிகள் பல கற்பனை கதைகள் கூறுவார்கள்.  தமிழீழ போராட்டத்தில், காலம் சென்ற இரு முக்கிய பேர்வழிகளின் (பிரித்தானியா, பிரான்ஸ்) முன்னெடுப்புடனும் ஆலோசனைகளுடனும் தமிழர் மனித உரிமைகள் மையத்தை (T.C.H.R.)ஐ 1990ம் ஆண்டு நாம் பிரான்சில் ஆரம்பித்தோம்.  இதனை தொடர்ந்து, கடந்த முப்பது (30) ஆண்டுகளுக்கு மேலாக, ஐ,நா மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டுவருபவன் மட்டுமல்லாது, அன்று முதல் எனது தொழில் சார் கணனி துறையிலிருந்து விலகி, மனித உரிமையை பற்றிய விடயங்களை,  துறைசார் கல்வியாக, பிரித்தானியவில் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், சர்வதேச மனிதர் உரிமை நிறுவனம் போன்ற உலக அங்கீகாரம் பெற்ற பல பல்கலைகழகங்களிலும் நிறுவனங்களிலும் கல்வி கற்று,  மனித உரிமை சேவை செயற்பாட்டிற்கான அறிவு தகமை அனுபவங்களை பெற்றுள்ளேன் என்பதை இங்கு பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். இதேவேளை கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை பற்றிய துறைசார் கல்வியை கற்றுள்ளதோடு, உலகில் சில முக்கிய பிரமுகர்களுடனான தொடர்குகளையும் பேணி வருகிறேன். எனது மனித உரிமை கல்வியை, சிறீலங்காவில் சட்டம் ஒழுங்கை கண்கணிக்கும் - சட்டமா அதிபர் திணைக்களம், காவல் துறையின் முக்கிய பணியாளர்களுடன்  மட்டுமல்லாது, சிறீலங்காவின் தலைசிறந்த கல்விமான்களுடனும் கற்று கொண்டேன் என்பதையும் கூறு விரும்புகிறேன்.  ஆகையால் ஜெனிவா, மனித உரிமை பற்றி கதைப்பதற்கும் கண்டிப்பதற்கும் எனக்கு அதற்கு ஏற்ற கல்வியும் தகமைகளும் உள்ள அடிப்படையில், ஜெனிவா பற்றிய யதார்த்தங்களை இங்கு தமிழீழ மக்களுடன் பகிர விரும்புகிறேன். எனது கட்டுரைகளை பொதுவாக தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடுவது தான் வழமை. ஆனால் இக்கட்டுரை நிச்சயம் ஆங்கிலத்தில் எழுதும் எண்ணமில்லை. அப்படியாக செய்யும் கட்டத்தில், இவ்வளவு தூரம் அறிவற்ற தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் உள்ளார்களா என மற்றைய இனத்தவர்களால் எண்ண தோன்றும். அது “எமது பல்லைக்குத்தி மற்றைய இனங்களுக்கு மணப்பதற்கு கொடுப்பதற்கு சமனாகும”; பெரும்பாலனவை புசத்தல்கள் நிற்க, என்னை பொறுத்தவரையில், இன்று வரை ஜெனிவா பற்றி வெளியான கட்டுரைகள் ஆய்வுகள் அலசல்கள் மனுக்கள் பெரும்பாலனவை புசத்தல்கள். அரசியல் வாதிகள் தமது வாக்கு வங்கிக்காகவும், செயற்பாட்டாளர்களும், செயற்பாட்டாளர் எனப்படுவோரும் நிதி வசூலிப்பதற்காகவும், தாமும் ஜெனிவாவில் ஏதோ வெட்டி விழுத்துவதாக அப்பாவி ஈழத்தமிழர்களுக்கு காட்சியளிப்பதற்காக செய்யப்படுபவை. எனது கட்டுரைகளில் தொடர்ந்து எமுதிவரும் முக்கிய விடயம் என்னவெனில், மனித உரிமை, போர்க்குற்றம். இன அழிப்பு போன்ற விடயங்களை ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை சபை மூலமே மற்றைய கட்டங்களிற்கு நகர்த்த முடியும். அதாவது ஐ.நா ஜெனிவா மனித உரிமை செயற்பாட்டிற்கான தளம். ஜெனிவாவில், அரசியல் தீர்விற்கான சுயநிர்ணய உரிமை என்ற விடயம், ஐ.நா மனித உரிமை சபை நிகழ்ச்சி நிரலில் அறவே கிடையாது. இதை புரிந்து கொள்ளதா அரசியல்வாதி ஒருவர், ஜெனிவாவிற்கு தவறாது வருகை தந்து, சுயநிர்ணய உரிமை பற்றி புசத்திவிட்டு போவது வழமை. இப்பொழுது ஐ.நா.மனித உரிமை சபையால் ஒரு பிரயோசனமுமில்லையென புசத்த தொடங்கியுள்ளார். ஐ.நா வின் கட்டமைபை பொறுத்த வரையில், நியூயோர்கில் உள்ள பொதுச்சபை, பாதுகாப்பு சபையிலேயே தமிழீழ மக்களது அரசியல் தீர்வுக்கான சுயநிர்ணயம் பற்றி உரையாடவும் வேலைசெய்யவும் முடியும். அதாவது ஐ.நா நியூயோர்க் என்பது ஓர் அரசியல் வேலைக்கான தளம். ஆனால், காலம் சென்ற வழக்கறிஞர் திரு வைகுந்தவாசனை தவிர்ந்த வேறு எந்த ஈழத்தமிழரும், இன்று வரை அங்கு ஈழத்தமிழர் சார்பாக வேலை செய்தது கிடையாது என்பதே உண்மை.  றோம் சாசனம் எனப்படும், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (International Criminal Court – ICC) சாசனத்தில், சிறீலங்கா கையெழுத்திடாத காரணத்தினால், சிறீலங்காவின் விடயத்தை ஐ.நா.ம.உ.சபை மூலமே ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு நகர்த்த முடியும். வேறு விடயங்கள் வழிகள் யாவும் வீண் புசத்தல்கள். மினமாரில் உள்ள ரோகினிய மக்களின் இன அழிப்பு விடயத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு (International Court of Justice - ICJ) கொண்டு சென்றது போல், தமிழீழ விவகாரங்களும் அங்கு கொண்டு செல்வதற்கு, 193 ஐ.நா அங்கத்துவ நாடுகளில், ஆக குறைந்தது ஒரு நாடு முன்வந்தால் மட்டுமே, இதை செய்ய முடியும். ஐ.நா. மனித உரிமை சபையால் பிரயோசனம் இல்லை என கூறும் அரசியல்வாதிகள், இதை செய்ய முன்வருவார்களா? புசத்துவதை தவிர்த்து, குறைந்தது ஒரு நாட்டின் உதவியை இவர்களால் பெற முடியுமா? இவர்கள் தேர்தல் மேடைகளில் புசத்துவது போல், ஐ.நா.விடயங்களில் புசத்துவது மிக வெட்க கேடான விடயம். வேடிக்கை என்னவெனில், சிறீலங்கா அரசு இன அழிப்பு  போர்க்குற்றம் புரிந்துள்ளதை உலகமே அறிந்துள்ள இக்கால கட்டத்தில், சைக்கிள் ஓட்டம், பாதயாத்திரை போன்ற  மக்களை ஏமாற்றும் பேய்காட்டும் வேலைத் திட்டங்களை மேற்கொண்டு பணம்படைத்தவர்களிடம் பெரும் தொகை பணத்தை சிலர் வசூலிக்கின்றனர். சைக்கிள் ஓட்டம், பாதயாத்திரை யாவும் 2009 மே மாதத்தின் பின்னர் உருவான பேய்காட்டு வேலை திட்டங்களில் சில! இதில் பங்குகொண்ட, கொண்டுவரும் தோழர்களை  பாராட்டுகிறோம்.  ஆனால் இதன் ஒழுங்கமைப்பாளர்கள், தமக்கு  மொழி ஆளுமையோ, மனித உரிமை பற்றியோ எந்த பகுத்தறிவும் அற்ற காரணத்தினால், சிறுபிள்ளைத்தனமாக தமிழீழ மக்களுக்கு நடைபெற்ற இன அழிப்பையும் போர்குற்றங்களையும்  சைக்கிள் ஓட்டம், பாதயாத்திரையால் இழிவு படுத்துகிறார்கள் என்பதே உண்மை.  சிங்கள புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் – அமெரிக்கா, பிரெஞ்சு ஜனதிபதிகளையும், பிரித்தானியா, கனடா பிரதமர்களை நேரில் சந்தித்து, பௌத்த சிங்கள அரசை நியாயப்பத்தும் இக் காலகட்டத்தில், சைக்கிள் ஓட்டம், பாதயாத்திரை  ஈழதமிழருக்கு இதுவரையில் என்னத்தை தந்துள்ளது? இனி எதை பெற்று தரும்?...

ஜெனிவாவா? நியூயோர்க்கா?

ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள்கவுன்ஸிலின் அமர்வை தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு அணுகவேண்டும் - சர்வதேச சமூகத்தை ஒற்றை நிலைப்பாட்டில் கையாள வேண்டும் - என்றதமிழ் மக்களின்...

வியாழனும் சனியும் இணைந்து ஒளிரும் பேரிணைவு..

இரு கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு கிரகங்களின் இணைவு என்று அழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்தின் இரு பெரும் கிரகங்களான வியாழனும், சனியும் இணையும் நிகழ்வை பேரிணைவு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்று...

சேனா படைப்புழுவை கட்டுப்படுத்த புதிய கிருமிநாசினி

சோளப் பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் சேனா படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கு என்.ஜி.வி எனும் கிருமிநாசினி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.டபிள்யு.எம்.வீரகோன் தெரிவித்திருக்கிறார்.ஒன்றரை வருடங்களாக மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கைகளின் பின்னர் இந்த கிருமிநாசினி...

ஆயிரம் முட்டை போட்ட ஆமை போல அமைதியாக பணிபுரிந்த சிறிதரன்!

இந்திய ராணுவ காலம்  - குப்பிளான் பகுதியில் சிறியண்ணாவும் இரு போராளிகளும் ஓரிடத்தில் தங்கியிருந்தனர்.அவர்களில் ஒருவர் குப்பிளான் பகுதிப்  பிரதேசப்பொறுப்பாளராக இருந்தவர் என்ற வகையில் மக்களுக்கு பரிச்சயமான முகம்.  அதிகாலைப் பொழுதில் வாகனசத்தங்கள்...

வரலாற்றில் இன்று 11.12.2020

திசம்பர் 11 (December 11) கிரிகோரியன் ஆண்டின் 345 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 346 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 20 நாட்கள் உள்ளன.பொருளடக்கம்நிகழ்வுகள்361 – யூலியன் உரோமையின் தனிப்பெரும் பேரரசராக...

உணவகங்களில் பேசாமல் சாப்பிட்டாலே கொரோனா பரவாதாம்..!

கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப காலத்தில் ஊரடங்கு போடப்பட்ட பின்னர் படிப்படியாக தொழில் துறைகள், போக்குவரத்து, உணவகங்கள் ஆகியவை திறக்கப்பட்டன. குறிப்பாக பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டன. இதனால், கொரோனா வைரஸ் தொற்றுநோய்...

கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.அதன்...

ஆசியாவில் 100 கோடி மக்கள் பாதிக்கப்படவுள்ளனர் அதிர்ச்சித் தகவல்!

ஆசியா கண்டத்தின் பருவநிலை மாற்றத்தால் இன்னும் முப்பது ஆண்டுகளுள் 100 கோடி மக்கள் பாதிக்கப்படவுள்ளனர் என்று அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.இதனைக் கட்டுப்படுத்த ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கா விட்டால்,...

தமிழரின் தொன்மையான கார்த்திகைத் தீபம் வழிபாடு

தமிழரின் தொன்மை வழிபாட்டில் தீபவழிபாடு முக்கியமானது. கார்த்திகைத் தீபம் பற்றிய பல பாடல்கள் சங்ககாலத்தில் உள்ளது. “தொல் கார்த்திகைத் திருநாள்…………தனத் தேந்தின முலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்” என்று...

Stay Connected

6,870FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம் ! விடுதி மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பத் தீர்மானம் – பரீட்சைகள் திட்டமிடப்பட்டபடி நடக்கும்

நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை கௌரவித்த கூட்டமைப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை இன்றைய தினம் அவரது இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும்...

நடிகர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி !

நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவர்களது மகன் நடிகர் சாந்தனு சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தங்களை...

உதயநிதி – ஆரி சந்திப்பு ! இனி தமிழ்நாட்டில் சூரியன் பிரகாசமாக ஒளிரட்டும்

நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார்.தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இன்று முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.தமிழ் சினிமாவில்...