January 15, 2021, 11:48 pm

ஆயிரம் முட்டை போட்ட ஆமை போல அமைதியாக பணிபுரிந்த சிறிதரன்!

இந்திய ராணுவ காலம்  – குப்பிளான் பகுதியில் சிறியண்ணாவும் இரு போராளிகளும் ஓரிடத்தில் தங்கியிருந்தனர்.அவர்களில் ஒருவர் குப்பிளான் பகுதிப்  பிரதேசப்பொறுப்பாளராக இருந்தவர் என்ற வகையில் மக்களுக்கு பரிச்சயமான முகம்.  அதிகாலைப் பொழுதில் வாகனசத்தங்கள் கேட்டன.பிரதானவீதியால் படையினர் செல்கிறார்கள் என ஒரு போராளி சொன்னபோது “இல்லை ;இது முற்றுகைதான்“ என உறுதியாக சொன்னார் சிறியண்ணா. காலையில் மக்கள் சொக்கவளவு சோதி விநாயகர் கோவிலடிக்கு சென்றனர். பாதுகாப்புக்காக இவ்வாறு மக்கள் கோவிலில் தஞ்சம் புகுவது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பித்த விடயம்.                அந்தக்  கோவிலடிக்கு வந்த இந்திய இராணுவ அதிகாரி அங்கு கூடியிருந்த மக்களை ஒரு முறை நோட்டம் விட்டு விட்டு மேலங்கியை கழற்றி கையில் வைத்திருந்த இருவரை கூப்பிட்டார்  ” ஆங்கிலம் தெரியுமா?“ எனக்கேட்டார். அவரால் கூப்பிடப்பட்டவர்களில் ஒருவர் பிரதேசப் பொறுப்பாளர் என்ற வகையில் யாரோ காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்ற நினைப்பில் இவர்களை பரிதாபமாக  நோக்கினர்  மக்கள்.  ” இங்கிருக்கும் யாரும் வெளியில் செல்லக்கூடாது; வெளியில் இருக்கும் எவரும் உள்ளே வரக்கூடாது. அத்துடன் எல்.ரி ரி .ஈ வந்தால் எங்களிடம் சொல்லவேண்டும். நீங்கள் இருவரும் இதனை மக்களுக்குச் சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றுசிறி யண்ணாவிடம் சொன்னார் அந்த அதிகாரி. ஏனெனில்சிறி யண்ணாதான் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொன்னவர். அந்தக்காலத்தில் இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மிகத் தெளிவாக இருந்தனர். இந்திய இராணுவத்தினர் ஆங்கிலத்தில் என்ன சொல்கிறார்களோ அதனை தமிழில் மொழிபெயர்த்து விட்டு கடைசியில் “எண்டு  இவர் சொல்கிறார்” என்று முடிப்பார்கள். வாய் விட்டு சிரிக்கமுடியாது; பயம் ஒரு புறம்; கண்களாலேயே ஒருவருக்கொருவர் செய்தி அனுப்பினர். எப்படியோ பின்னர் போராளிகள் மூவரும் அங்கிருந்து அகன்று விட்டனர். அன்றைய முற்றுகையில் கற்கோவளப் பிள்ளையார் கோவிலடியில் ஒரு அப்பாவியைச் சாகடித்திருந்தனர் இந்தியப்படையினர்.

எப்படியோ கடல் வழியாக இந்தியா  சென்றனர்  இரு போராளிகள். அதில் சிறி யண்ணாவும் ஒருவர். இவர்கள் சென்னையில் கிட்டுவைச் சந்தித்தனர்.
எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல் மாற்று ஏற்பாடுகளை செய்வதில் கிட்டு வல்லவர்.வீட்டுக்காவலில் இருக்கும்போதே திட்டமிட்டு செயலாற்றிய கிட்டு இயக்கத்தின் சார்பிலும் குறிப்பாக தனது சார்பிலும் மிக முக்கிய புள்ளிகளை சந்திக்க சிறியண்ணாவை அனுப்பிவைத்தார். பின்னாளில் இந்தியப்பிரதமரான வி.பி சிங் ,கர்நாடக  முதலமைச்சர் இராமகிருஷ்ண ஹெக்டே,தி.மு.க தலைவர் கருணாநிதி, வைகோ ,தி. க தலைவர் வீரமணி, தமிழக முன்னேற்ற முன்னணி தலைவர் சிவாஜிகணேசன், பழ. நெடுமாறன் ஐயா என இப் பட்டியல் மிக நீண்டது. கம்யூனிஸ்ட்டு  கட்சி பிரமுகர் ராஜேஸ்வர ராவ், தெலுங்கானா போராட்டத்தின் போது தங்களை இந்திய இராணுவத்தினர் எப்படி நடத்தினர் என சிறியண்ணாவுக்கு விபரித்தார். இந்தியப்படையினருடன் தாக்குப்பிடிக்க மாட்டீர்கள்  என அனுதாபப் பார்வை தான் கம்யூனிஸ்களிடம் இருந்து வந்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு பயனுள்ளதாக அமையவில்லை.

கருணாநிதியுடனான சந்திப்பு ஓரளவு பயன் விளைவித்தது. இதில் வைகோ வின்பங்கு பெரிதாக இருந்தது.

இலங்கையில் இந்தியப்படையினர் தமது யுத்த நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்  என்ற கோரிக்கையை முன்வைத்து மெரீனா கடற்கரையில் சிவாஜிகணேசன் உண்ணாவிரதம் இருந்தார். மேஜர் சுந்தரராஜன் உட்பட பல திரையுலகப் பிரமுகர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னாளில் இந்தியப்படையினரை திருப்பி அழைப்பதான முடிவை வி.பி.சிங் எடுப்பதற்கு சிறியண்ணாவுடனான சந்திப்பு வழிவகுத்தது.
`
யூ  ரூ  புரூட்டஸ்`என்று யூலிய சீசர் கேட்ட வினா உலக அரங்கில் பிரபலம். அதேபோல் “you  too  india ” என்ற தலைப்பில் ஒரு வலுவான ஆவணப் பதிவொன்றை வெளியிட கிட்டு முயற்சித்தார்.

இதற்காக இன்னொரு போராளியுடன் சென்று கன்னிமரா நூல்  நிலையத்தில் சுமார் ஆறு மணித்தியாலயங்களை செலவிட்டார் சிறி யண்ணா. இந்தியஅரசியலில் கொடிகட்டி பறந்த அரசியல் வாதிகள் அனைவரும் தமது நெஞ்சைப் தொட்டுப்பார்க்கும் வகையில் வலுவான ஆவணங்களும் புகைப்படங்களும் இந் நூலில் இடம்பெற்றன  .
இவ்வாறு சிறி யண்ணாவில் நம்பிக்கை வைத்து கிட்டு இம் முயற்சியில் இறங்கினார் என்றால் அதற்கு கடந்த கால அனுபவங்களே காரணம்.

“இதனை இதனால் இவன் முடிக்கும் – என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்”  என்பது பொய்யா மொழிப்ப புலவரின் கருத்து.ஏற்கெனவே கிட்டு யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளராக,தளபதியாக விளங்குகையில் இவரது பங்களிப்பை மிக  நன்றாகவே உணர்ந்திருக்கிறார். “ஆயிரம் முட் டைபோட் ட ஆமையாக அலட்டிக்கொள்ளாமல் தன் பணிகளைச் செய்யும் போக்கு இவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தது. ஏற்கெனவே இந்தியாவுக்கு இவரையும் இன்னொரு முன்னைநாள் உதவி விரிவுரையாளரையும் அனுப்பி  இருந்தனர் புலிகள்.அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பொருண்மியம் தொடர்பாக கற்று வந்து நாட்டில் ஆற்றிய பணிகள் மிகத் திருப்தியை அளித்திருந்தன.

தமிழகத்தில் தங்கியிருந்த புலிகள் 8.8.88 அன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோதே இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. (அன்று கிட்டு தங்கியிருந்த வீட்டில் இருந்தோர் தவிர) சுமார் ஒரு மாதத்தின் பின்னரே கிட்டுவும் சிறைக்குள் கொண்டுவரப்பட்டார்.
சிறைக்குள்  மனித வரலாறு பற்றி சிறியண்ணா வகுப்புக்கள் எடுத்தார். குறிப்பாக மனிதனின் சண்டை முதலில் உணவுக்காகவே ஆரம்பித்தது. பின்னர் கொல்வதை விட அடிமையாக்குவது பயனளிக்கும் என முடிவெடுத்தான் மனிதன் என்பதிலிருந்து பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

கிட்டு “எங்களை விடுதலை செய்யுங்கள்; அல்லது நாட்டில் உள்ள எமது உறுப்பினர்களிடம் ஒப்படையுங்கள் ” என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து சென்னை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு கைதிகளாகவே  விமானமூலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டனர் அனைவரும். இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறையிலிருந்த இந்திய படையினரின் சிறையில் அடைக்கப்பட் டார்சிறியண்ணா. கிட்டுவுடன்  ஊனமுற்ற ,நோயாளிகளான ,ஒரு சிலர் மட்டுமே விடுதலையாகினர் .¨

இந்திய படையினர் வெளியேறத்தொடங்கிய காலத்திலேயே இவர் விடுதலை செய்யப்பட்டார்(.20.2.1990 அன்று)

1987 ல் இடைக்கால நிர்வாக சபைக்கு முதலில் பெயரிடப்பட்டவர்களில் இவரும் ஒருவர். கிழக்கு மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் என்பதாலேயே பின்னர் அந்த நிலையில்  மாற்றம் ஏற்பட்டது.

1992 ல் இங்கிலாந்துக்கு சென்ற பின்னரும் எங்கள் மக்கள் மீதான, சந்ததியினர் குறித்த அக்கறை சிறி யண்ணாவுக்கு மேலும் அதிகரித்தது.  Child First (UK)  அமைப்பை ஆரம்பித்து காத்திரமான பணிகளை மேற்கொண்டார். ஆரவாரமில்லாத அரசியல், எதிர்பார்ப்பில்லாத வகையில் இவரது பணிகள் அமைந்தன. கடுமையாக நோய்வாய்ப்பட்டபோதும்  அடுத்த தலைமுறையினர் மீதான கரிசனையினால் ஆளு மைமிக்கவர்களாக பலரை உருவாக்கி எல்லாம் சரியாக நடக்குமாறு பார்த்துக்கொண்டார்.

கிட்டுவின் இழப்பின் போது “தோளில் தூக்கி சுமந்திருந்தால் துன்பம் ஆறிவிடும் என்று பாடல் எழுதினார் யோகன் பாதர்.
சிறி யண்ணாவின் இழப்பின் போது பெருமளவில் கூட முடியதளவுக்கான சூழ்நிலை  ஏற்பட்டது நாமும் காணொளி மூலமே இவரது இறுதி நிகழ்வை காணமுடிந்தது. இதயம் கனத்தது. விழிகள் பனித்தன.

போய்வாருங்கள் சிறிதரனே உங்கள் நினைவுகள் மட்டும் எப்போதும் எம்மிடம் இருக்கும்

Related Articles

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

Stay Connected

6,163FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்

மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...

புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்

தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13  உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...

6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...