January 19, 2021, 3:24 pm

அரசுக்கு கருணா நண்பன் தனது இன விடுதலைக்கா போராடிய பிரபாகரன் பயங்கரவாதி: வவுனியா போராட்டத்தில் மௌலவி

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுகின்றமைக்கு எதிராக வவுனியாவை சேர்ந்த மௌலவி ஒருவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக காலை 10.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மௌலவி கருத்து தெரிவிக்கையில், கொரோனா ஒரு கொடிய உயிர் கொல்லி நோயல்ல, பன்றி இறைச்சியில் உள்ள வைரஸை விட கொரோனாவில் கொடிய வைரஸ்கள் கிடையாது. காய்ச்சலும், தலையிடியும், சளியும் எப்படி ஒரு மனிதனை கொல்லும். கொரோனாவுக்கு தீர்வு உடல்களை எரிப்பதா? ஏன் இந்த அநியாயத்தை முஸ்லிம்களுக்கு செய்கிறீர்கள். இன்றுவரை இறப்பவர் கொரோனாவினால் தான் இறக்கின்றார் என்று எந்த ஒரு வைத்தியரும் நிரூபிக்கவில்லை.

யாரை இந்த அரசுக்கு பிடிக்காதோ அவர்களிற்கு கொரோனா என சொல்கிறார்கள். எனவே பரிசோதனைக்கு செல்பவர்கள் உங்களிற்கான பரிசோதனை அறிக்கையை வைத்தியர்களிடம் கேளுங்கள்.

இலங்கையில் இறந்த ஒருவருக்கும் கொரோனா இல்லை. வைத்திய துறையிலேயே இருக்கும் அறிவார்ந்த வைத்தியர்கள் இந்த அதிகாரிகளிற்கு பயந்து பின்னால் நிற்கின்றார்கள்.

சாணக்கியன் நேர்மையாக கதைத்தார். இறைவன் அவருக்கு அருள் புரிவார். கூலிப்படைகள் அவருக்கு எதிராக கதைத்தார்கள். அரசியல்வாதிகள் கைப்பொம்மைகளாக இருக்கிறார்கள்.

ஆளும் கட்சியிலும் நேர்மையானவர்கள் இருக்கின்றார்கள். மிகவிரைவில் அவர்கள் வெளியிலே வருவார்கள்.

முள்ளிவாய்க்காலில் உரிமை கேட்டவர்களை மெனிக்பாமில் அடைத்தீர்கள். இது நியாயமா? தமிழனும், முஸ்லிமும் கதைத்தால் தீவிரவாதி.

ஆட்சி வெறி, அதிகார வெறி அரசியல் துஷ்பிரயோகம் ஆகியவையே உங்களை இப்படி செய்விக்கின்றது. 20 மாத குழந்தையை எரித்தீர்கள்.

நீங்கள் கொலை செய்து பழக்கப்பட்டவர்கள். முள்ளிவாய்க்காலில் பச்சை குழந்தைகளை கொன்றீர்கள். உங்களிடம் இரக்கம் இருக்குமா? தமிழ்மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தினீர்கள். மூன்று இனங்களையும் அழித்த கருணா உங்களுக்கு நண்பன். உரிமைக்காக போராடிய பிரபாகரன் பயங்கரவாதி என்றீர்கள் என தெரிவித்துள்ளார்.

Related Articles

கொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி!

காலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாரா?அண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது!!!

Russian opposition leader Alexei Navalny is escorted by police officers after a court hearing, in Khimki outside Moscow, Russia January 18, 2021. Evgeny Feldman/Meduza/Handout...

கொரோனா தொற்றின் புதிய அறிகுறி

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...

Stay Connected

6,303FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி!

காலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாரா?அண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது!!!

Russian opposition leader Alexei Navalny is escorted by police officers after a court hearing, in Khimki outside Moscow, Russia January 18, 2021. Evgeny Feldman/Meduza/Handout...

கொரோனா தொற்றின் புதிய அறிகுறி

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...

7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு!!!

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...

மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு

ஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...