28.6 C
Jaffna
Wednesday, April 21, 2021

ஜெனீவா அழுத்தத்திற்கு அச்சமின்றி முகம்கொடுக்க தயார்-ஜனாதிபதி

ஜெனீவா அழுத்தத்திற்கு தாம் அச்சமின்றி முகம்கொடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும்.

இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றும், இந்து சமுத்திர அதிகாரப் போராட்டத்திற்கு தாங்கள் பலியாக மாட்டோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளால், தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதன் விளைவாகும்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டில் படைவீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை அளிக்கும் அளவுக்கு நாட்டின் இறையாண்மை சிதைந்தது.

பழக்கப்பட்ட யானைகள் தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்தி, கலாசாரம், மதம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எம்.சி.சி எனப்படும் மிலேனியம் சவால் கூட்டுறவு ஒப்பந்தம் மற்றும் கிழக்கு முனையம் போன்ற ஒப்பந்தங்களுக்கு வந்தபோது நாடு பெரும் நெருக்கடியில் மூழ்கியது.

அவற்றுக்கு இன்று தீர்வுகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரச்சினைகளையும் உருவாக்கி அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

கடந்த அரசாங்கத்தின் பிரபலமானவர்கள், ஒருபோதும் ஆட்சியில் இல்லாதிருந்தவர்கள்போல் இன்று கருத்து வெளியிடுட்டு, செயற்படுகின்றனர்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி பேசுவது தமது கொள்கை அல்ல என்றாலும், உண்மையை தெளிவுபடுத்துவதற்காக அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Related Articles

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம்...

கொரோனா தொற்றுக்குள்ளான 367 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 367 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,105 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 620 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம்...

கொரோனா தொற்றுக்குள்ளான 367 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 367 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,105 இலிருந்து...

இலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 620 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...