January 19, 2021, 5:00 am

அரசியல் கைதிகள் விவகாரம்: நேரடிப் பேச்சுக்கு அரசு தயார்! – மாவையிடம் தினேஷ் தெரிவிப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் தன்னிடம் தெரிவித்தார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய் தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் நிமிர்த்தம் அவர்கள் அனைவரையும் உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களைப் பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று சபையில் தெரிவித்திருந்தார். தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பிணையாளர்களாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர் என்ற தகவலையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை நேற்று மாலை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்ட வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நேரில் பேசுவோம் என்று கூறியுள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தற்போது கொழும்பில் நிற்பதால் இன்று அல்லது நாளை இந்தப் பேச்சை ஒழுங்கு செய்யலாம் என்று தினேஷிடம் மாவை இதன்போது பதிலளித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளை அரசின் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன பேச்சுக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்ப்பு!

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ...

வாராந்தம் ஒரு இலட்சம் உயிர்களை கொரோனா காவுகொள்ளும் என எச்சரிக்கை!

சர்வதேச அளவில் விரைவில் வாரத்துக்கு ஒரு இலட்சம் என்ற அளவுக்கு கொரோனா மரணங்கள் உயரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால தலைமை நிபுணர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.கடந்த வாரம் 93...

கனடாவில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலம்பெயர் தேசத்தவர்கள்!

கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் அவா்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக புதிய கணிப்பீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள்...

Stay Connected

6,249FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்ப்பு!

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ...

வாராந்தம் ஒரு இலட்சம் உயிர்களை கொரோனா காவுகொள்ளும் என எச்சரிக்கை!

சர்வதேச அளவில் விரைவில் வாரத்துக்கு ஒரு இலட்சம் என்ற அளவுக்கு கொரோனா மரணங்கள் உயரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால தலைமை நிபுணர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.கடந்த வாரம் 93...

கனடாவில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலம்பெயர் தேசத்தவர்கள்!

கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் அவா்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக புதிய கணிப்பீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள்...

உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறக்க தீர்மானம் !

எதிர்வரும் 21ஆம் திகதி சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.சுற்றுலா பயணிகளிடம் இருந்து சமூகத்திற்கும் சமூகத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கும்...

கொரோனா தொற்றுக்குள்ளான 674 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 674 பேர் நேற்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,076 இலிருந்து...