January 21, 2021, 5:03 am

அரசியல் கைதிகள் விடுதலை; ஜனாதிபதியுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவு!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்றை விரைவில் எடுப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் காலம் தாழ்த்தாது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 15 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையெழுத்திட்ட கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான நேற்றைய சந்திப்பின்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடாளுமன்றத்தில் எதிரணியிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் குறித்த உறுப்பினர்களால் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அவர்கள் என்னுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதிக்குரிய கடிதத்தை அவரிடம் நான் சமர்ப்பிக்கவுள்ளேன். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்று விரைவில் எடுக்கவுள்ளோம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கிணங்க இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் அவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து கொடுக்கவுள்ளேன் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Related Articles

இலங்கையின் ஜனநாயகம் படிப்படியாக அழிகின்றது- யஸ்மின் சூக்காவின் அமைப்பு கடும் கண்டனம்

இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவ மயமாக்கல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆடசியில் இடம்பெறுகின்றது. இதானால் இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது." - இவ்வாறு யஸ்மின் சூக்கா...

ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற மூவர்! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற ஹற்றனைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதன்போது ஆறு கிலோ நிறையுடைய ஐம்பொன் புத்தர் சிலையை சிறப்பு அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.அத்தோடு இந்நிலையில்...

கனடாவின் பிராம்டன் நகரில் அமைகிறது இனவழிப்பிற்குள்ளான தமிழ்மக்களுக்கான நினைவுத்தூபி

சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை...

Stay Connected

6,366FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இலங்கையின் ஜனநாயகம் படிப்படியாக அழிகின்றது- யஸ்மின் சூக்காவின் அமைப்பு கடும் கண்டனம்

இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவ மயமாக்கல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆடசியில் இடம்பெறுகின்றது. இதானால் இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது." - இவ்வாறு யஸ்மின் சூக்கா...

ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற மூவர்! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற ஹற்றனைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதன்போது ஆறு கிலோ நிறையுடைய ஐம்பொன் புத்தர் சிலையை சிறப்பு அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.அத்தோடு இந்நிலையில்...

கனடாவின் பிராம்டன் நகரில் அமைகிறது இனவழிப்பிற்குள்ளான தமிழ்மக்களுக்கான நினைவுத்தூபி

சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை...

கனடாவில் இன்று தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!

தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் கனடிய பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ளவுள்ளார்நாளை (வியாழன்) மெய்நிகர் நிகழ்வாக இந்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற...

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; காரணத்தை நீதிமன்றத்தில் கூறிய பொலிசார்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திருந்தது.தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை...