அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதப்புரட்சி (போராட்டம்) இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக FBI அமைப்பின் உள்ளக அறிக்கையொன்று எச்சரித்துள்ளது.மேலும் ‘தேசிய-மாநில-நகர’ மட்டங்களிலுள்ள அரச நிர்வாகக் கட்டடங்களை முற்றுகைக்குள்ளாக்கவும் திட்டமிடப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி Donald Trump ஐ ‘AMENDMENT 25’ எனப்படும் ’25 ஆம் திருத்தச்’சட்டத்தின் பிரகாரம் அல்லது ‘IMPEACHMENT’எனப்படும் ‘குற்றப்பிரேரணை’ மூலம், ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர், பதவியில் இருந்து அகற்றும் முனைப்புக்களை அமெரிக்கக் கொங்கிரஸ் முன்னெடுத்துள்ள நிலையில், நாசகாரச் செயல்களில் ஈடுபட்டு, இரத்தக்களரியை ஏற்படுத்த Trump இன் ஆதரவான குழுக்கள் முற்பட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.அத்துடன், புதிய ஜனாதிபதியாக Joe Biden பதவியேற்பதைத் தடுப்பதும், இக்குழுக்களின் திட்டம் எனவும் கருதப்படுகிறது.எனவே, எதிர்வரும் நாட்கள் அபாயமானவை என்றே அஞ்சப்படுகிறது.