‘வி’ நடிகர் நடிப்பில் உருவாகியுள்ள சண்டை படத்தில் இடம்பெற்றுள்ள அழகு பாடல் தேவி நடிகையை ரென்ஷனாக்கி உள்ளதாம்.
எப்போதுமே தன்னை இயக்குநர்கள் இரண்டாவதாகவே பார்க்கிறார்கள் என்றும், தங்கம் போல மின்னும் தான் அழகானவள் இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளாராம். படம் வெளியாகவுள்ள நிலையில், இது என்னடா புதிய பூதம் கிளம்பியுள்ளது என்று இயக்குநர் பதற்றத்துடன் உள்ளாராம்.
பெரிய படங்கள் என்றாலே சண்டை உள்ளிட்ட காட்சிகளில் நடிக்க, பிரம்மாண்ட படங்களில் இந்த நடிகையை இயக்குநர்கள் அழைக்கின்றனர். ஆனால், இவருக்கு பெரிய அளவில் மார்க்கெற் இல்லை என்பதால், இரண்டாவது ஹீரோயினாகவே நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அழகாக இருந்தாலும், அந்த தேவி நடிகைக்கு போதிய மார்க்கெற் இல்லாததே இதற்கு காரணம் என்று திரையுலகில் பரவலாக பேசிக் கொள்கிறார்கள். விரைவில் திரைக்கு வரவிருக்கும் அந்த சண்டை படத்திலும் தேவி நடிகையை விட அந்த லட்சுமிகரமான நடிகைக்குத்தான் அதிக முக்கியத்துவமாம்.
பல வருடங்களாக ஹீரோயினாக நடித்து வந்தாலும், ஏன் அந்த தேவி நடிகையால் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை என்பதற்கு காரணமாக இருப்பது அவரது ஓவர் நடிப்பு தான் என்கின்றனர்.
ஐந்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால், ஐநூறு ரூபாய்க்கு நடிக்கும் அந்த ஓவர் நடிப்பு தான் அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதாம். பாவம் வருவதை தானே செய்வார்.
காமெடி படங்களை இயக்கி வந்த அந்த இயக்குநர் திடீரென பெரிய அளவு பட்ஜெட்டில் சண்டை படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் அந்த படத்தில் இருந்து வெளியான அழகு பாடல், அம்மணியை அதிகளவில் அப்செற் செய்துள்ளதாம்.
இதுவரை தாம் தான் அந்த படத்தின் ஹீரோயின் என இரசிகர்கள் நம்பியிருந்த நிலையில், அந்த பாடல் வீடியோ வெளியான நிலையில், பலரும் அந்த லக்ஷ்மி கரமான நடிகைக்கு ரசிகர்கள் ஆனது தான் இந்த கோபத்திற்கான காரணமாம்.