முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ருப் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கு மறியலில் வெய்க உத்தரவிட பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் இருவரும் Skype தொழினுட்பம் ஊடாக கோட்டை நீதவான் பிரியகன்த லியனிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
2015 முதல் 2019 ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதோசவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக திருகோணமலை கிண்ணியா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று 15 காலை 6:30 க்கு இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்ய பட்டமை குறிப்பிடத்தக்கது.