January 20, 2021, 12:35 pm

அபாய வலயமானது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாறாக நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியானது. இவர் தம்புள்ள பகுதிக்குச் சென்று மரக்கறிகளை பெற்று வந்து புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு ஆகிய சந்தை வியாபாரிகளுக்கு வழங்கும் நபர் என முதல்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தம்புள்ளவிற்கு செல்பவர்கள் உள்ளிட்ட மரக்கறி வியாபாரிகள் சிலரிடம் அண்மையில் எழுமாறாக பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டது.

எழுமாறாக பிசிஆர் மாதிரிகளை பெற்றமையால், மாதிரிகள் பெறப்பட்ட யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. இப்படி, மாதிரி பெறப்பட்ட ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று மாலை பிசிஆர் முடிவுகள் கிடைக்கும் வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடியுள்ளார். இதனால் புதுக்குடியிருப்பு பகுதி அபாய வலயமாகுமா என மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது.

நேற்று முடிவுகள் வெளியாகிய நிலையில் குறித்த நபரின் வீட்டுக்குள் நபர் முடக்கப்பட்டு இராணுவம் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுகாதார அதிகாரிகள் குறித்த நபர் நடமாடிய இடங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

பின் அவர் கிளிநொச்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு நோயாளர் காவுவண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவரின் நடமாட்டம் பற்றிய புதிய பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அந்தவகையில் அவர் ஐயப்ப பக்தர் எனவும் ஐயப்பன் விரதம் இருந்தார் என்றும் நேற்று தான் புதுக்குடியிருப்பு கைவேலியிலுள்ள பாரதி சாமி ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று மாலை கழற்றியுள்ளார்.

அங்கு மண்டல பூசை நடந்தது. அங்கு பெருமளவு ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடியுள்ளனர். சுமார் 130 பேர் வரையில் அங்கு ஒன்றுகூடியதாக, ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்ற ஒருவர் தெரிவித்தார். இதனால் அவருடன் தொடர்பிலிருந்த ஐயப்ப பக்தர்களும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படலாம் என அறியமுடிகிறது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான நபர் ஒரு மரக்கறி மொத்த வியாபாரி என்பதால் அவர் புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு ஆகிய சந்தை வியாபாரிகளுக்கு மரக்கறிகளை வழங்கி வந்துள்ளார்.

எனவே குறித்த நபருடன் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரியிடம் அல்லது புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறும் இதனால் இது பாரிய சமூக தொற்றாக பரவுவதை தடுக்க முடியும் எனவும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் முகமாக பொலிஸார் ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்கான அறிவுறுத்தலை வழங்கி வருகின்றனர். மறு அறிவித்தல் வரை ஆலயங்களில் வழிபாடுகளை நிறுத்துமாறும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களை தவிர்க்குமாறும் பொலிஸார் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, இந்திய மீனவப் படகிலிருந்தவர்களை தேடி விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.நேற்று...

கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...

குருந்தூர் மலை விவகாரம்! தமிழ் மக்களுக்கு விதுர விக்ரமநாயக்க விடுத்துள்ள செய்தி!

தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.குருந்தூர் மலை தொல்பொருள்...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது.லீ ஜெய்-யோங் சாம்சுங் நிறுவனத்தின் கீழ்...

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக ட்ரம்ப் தெரிவிப்பு!!!

 தாம் எதைச் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்டாரோ அதனை செவ்வனே செய்து முடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அத்துடன் மேலும் பல விடயங்களை செய்துள்ளதாகவும் தமது பிரியாவிடை உரையில் அவர் கூறியுள்ளார்.YouTube காணொளியொன்றில், ஜனாதிபதி...