மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அதி வேக வீதி நுழைவாயில்கள் இன்றையய தினம் (09) திறந்திருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று (08) பிற்பகல் பொலிஸ் களப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 30ஆம் திகதி முதல் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் (09) நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.