January 17, 2021, 8:54 pm

அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா? அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் சிறீதரன் எம்.பி

அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா ? அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் வாழ்வதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.
உதயநிலா விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதயநிலா பிரீமியர் லீக் மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்
மிகமுக்கியமாக இன்றைய காலகட்டம்  என்பது எல்லோருக்குமே ஒரு அச்சம் மிகுந்த சூழ்நிலையைத்தந்திருக்கிறது. இன்று என்ன நடக்கிறது நாளை நாளை மறுதினம் என்ன நடக்கும் என்ற கேள்விகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழவேண்டிய காலம் வருமோ அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம். இந்த வேளையில் நான் இளைஞர்களை கோருவது இந்ம மண்ணிலே நாம் தமிழ்த்தேசிய இனமாக எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக  உணர்வுகள் சூழ்ந்த இனமாக இந்த மண்ணிலே நாம் வாழவேண்டும். இன்று (நேற்று) கூட யாழ்ப்பாணம் இந்துக்கலர்லூரியின் மாணவன் ஒருவன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த மாணவனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு உணர்வு என்பது என் உள்ளத்தில் மட்டும் இருந்து வந்தால் போதுமானது தாய்தந்தையிரிடம் கேட்கவேண்டும் என்று நான் யோசிக்கவில்லை. இங்கே எனது இனம் அழிக்கப்படுகிறது. என் இனத்தின் அடையாளங்கள் தொலைக்கப்படுகிறது  அதனால் இந்தப்போராட்டத்தில் குதித்து இருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டிருந்தான். இந்த செய்தியெல்லாம் நாங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ இடர்களை சந்திக்கப்போகின்றோம்.சிங்கள பௌத்த அரசுகளால் சூழப்பட்டுள்ள இந்த நிலை மிகப் பெரிய கேள்விகளை எங்கள் முன்னால் வைத்திருக்கிறது இவற்றுக்கெல்லாம் அஞ்சாது சோரம் போகாதவர்களாக வாழவேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வானது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களால் குறித்த கழகத்திற்கு வழங்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் யாழ்மாவட்ட காணி உரித்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பத்மஸ்ரீ கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் கரைச்சி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்  முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி முன்னாள் அதிபர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் மாவட்ட பயிற்றுவிப்பாளர் ச.குமார் கரைச்சி பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் நிகழ்வின் ஆனுசரணையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகம் சென்றவர்கள் தேசிய ரீதியில் சாதனை படைத்தவர்கள் உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் கௌரவிக்கப்பட்டனர்

Related Articles

கிளிநொச்சி முரசுமோட்டயைில் விபத்து -இளைஞன் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த...

உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!

உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை...

Stay Connected

6,230FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கிளிநொச்சி முரசுமோட்டயைில் விபத்து -இளைஞன் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த...

உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!

உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை...

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த...

நோர்வேயில் தடுப்பு மருந்து போட்டு 23 பேர் உயிரிழப்பு

நோர்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட...