January 26, 2021, 12:49 pm

அடிலெய்ட் சரிவையே நினைத்துக் கொண்டிருந்தால் வீழ்ந்திருப்போம்:ரஹானே

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அடிலெய்ட் டெஸ்ட்டுக்குப் பிறகு ஊக்கமுடனும் தன்னம்பிக்கையுடனும் வந்த ஆஸ்திரேலிய அணியை புத்தெழுச்சி பெற்ற ரஹானே தலைமை இந்திய அணி வெற்றி பெற்று சாதனை புரிந்ததோடு தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய தலைவலியாக மாறி விட்டார் கேப்டன், பேட்ஸ்மென் ரஹானே. அருமையான டீம் ஒர்க்கில் நல்ல திட்டமிடலில் ஆஸ்திரேலிய அணியை கண்டபடி முடக்கினர் இந்திய பவுலர்கள். ரன் விகிதம் 2 ரன்களை எட்டுவதற்கு ஆஸி அணிக்கு 80 ஓவர்களுக்கும் மேல் ஆகிறது,கேப்டன்சி, களவியூகம், பந்து வீச்சு மாற்றம் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தும் விதம், அமைதியான தலைமை என்று ரஹானே பின்னி எடுத்தார்.

இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்ட ரஹானே கூறியதாவது:

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை நினைத்துக் கொண்டிருந்தோமானால் வீழ்வது சுலபம். அதனால் அதைப் பின்னுக்குதள்ளி, தீவிர அணுகுமுறையுடன் களமிறங்கினோம், தனிநபர்களின் கூட்டு முயற்சி என்பதுதான் செய்தி. இதைச் செய்தால் முடிவு தன்னாலே வரும் என்பது எங்களுக்குத் தெரியும்.

முதலில் பேட் செய்ய விரும்பினோம். ஆனால் பவுலிங்கில் கட்டுக்கோப்புடன் வீசினோம். அஸ்வின் 10வது ஓவரில் கொடுக்கத் தொடங்கிய நெருக்கடியை தொடர்ந்து கொடுத்தார். அறிமுக வீரர்களான கில், சிராஜ் அபாரம். 3-4 ஆண்டுகள் முதல்தர கிரிக்கெட் ஆடி இந்தியா ஏ ஆடி சர்வதேச கிரிக்கெட்டுக்கு வரும்போது பெரிய பயனளிக்கும்.

சிராஜ் கட்டுக்கோப்புடனும் பொறுமையுடனும் வீசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து வீரர்களையும் நினைத்து பெருமையாக உள்ளது. கில், சிராஜுக்கு பாராட்டுக்கள்.உமேஷை இழந்தது துரதிர்ஷ்டம், ஆனால் மற்றவர்கள் பங்களிப்பு அபரிமிதம். ஆல்ரவுண்டர் தேவை என்று கருதினோம் ஜடேஜா அதைப் பூர்த்தி செய்தார். 5 பவுலர்கள் உத்தி நன்றாக வேலை செய்தது.

அடிலெய்டில் ஒரு மணி நேர ஆட்டம் நம்மிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டது. உமேஷ் குணமடைந்து வருகிறார், ரோஹித் வருகை உற்சாகம் அளிக்கிறது. அவரிடம் பேசினேன் அவரும் உற்சாகமாகவே இருக்கிறார்.

இவ்வாறு கூறினார் ரஹானே.

Related Articles

சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க இன்று அங்குணகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நீர்கொழும்பு, பல்லன்சேனை இளம் குற்றவாளிகள் சீர்திருத்த பள்ளியில் தங்க...

இலங்கையின் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு..!

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு அறிவுறுத்துவது இலங்கையின் இறையாண்மயை அச்சுறுத்தவதாகவோ கேலிக்கு உள்ளாக்குவதாகவோ அமையாது என்று அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.காணொளி ஊடாக ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போது...

மணல் விலையைக் கட்டுப்படுத்த அரசின் தலையீடு அவசியம்: மஹிந்த அமரவீர

மணல் விலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசாங்கத்தின் தலையீடு அவசியமென சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.மணல் வியாபாரத்தில் ஈடுபடும் சங்கங்கள் சிலவற்றுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் இந்த...

Stay Connected

6,386FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பங்கேற்றபோது படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  அவர்களுடன்...

நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது! – தலதா அத்துகோரல

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று  (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை...